Editorial / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பொலொக்னா அணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி அணி வென்றது. நாப்போலி அணி சார்பாக, அர்க்கடியுஸ் மிலிக் இரண்டு கோல்களையும் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றதோடு, பொலொக்னா அணி சார்பாக பெடெரிக்கோ சன்டன்டர், டனிலோ லரன்ஜெய்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சம்ப்டோரியா அணியுடனான போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற இரண்டு கோல்களுடன் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணி வென்றது. சம்ப்டோரியா அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை பபியோ குவாக்லியரெல்லா பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .