Editorial / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அராலி ஸ்ரீ முருகன் சனசமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள் ஒட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.
ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் 84வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்தப் போட்டியானது ஸ்ரீ முருகன் சனசமூகத்திற்கு அருகாமையில் ஆரம்பமானது.
இவ்வாறு ஆரம்பமான சைக்கிள் ஓட்டமானது ஐந்து சுற்றுக்களாக ஆலடிச் சந்தி, அராலி ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய வீதி, அராலிப் பாலம், வட்டுக்கோட்டை சந்தி ஊடாக மீண்டும் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தை வந்தடைந்தது.
இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த வீரர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதில் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தினர், சைக்கிள் ஓட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்











7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026