2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சாதிப்பாரா தலைவர் கார்லொஸ் பிறெத்வெய்ட்?

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் இருபதுக்கு-20 சர்வதேச அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனுபவம் குறைந்த வீரரான கார்லொஸ் பிறெத்வெய்ட்டால், மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகரமாக வழிநடத்த முடியுமா என்ற கேள்வி காணப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டு தடவைகள் உலக இருபதுக்கு-20 தொடரை வென்றுகொடுத்த தலைவரான டெரன் சமி, தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, எட்டே எட்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள பிறெத்வெய்ட் நியமிக்கப்பட்டார். இவ்வாண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில், 4 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்களை விளாசி, மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிண்ணத்தை வென்றுகொடுத்தவர் என்ற போதிலும், அவரால் தலைமை தாங்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது.

குறிப்பாக, குழப்பங்களுக்குப் பெயர் போன மேற்கிந்தியத் தீவுகளை, டெரன் சமி சிறப்பாக வழிநடத்தியிருந்த நிலையில், அவரளவுக்கு பிறெத்வெய்ட்டால் செயற்பட முடியுமா என்பது கேள்வியே.

இந்தியாவுக்கெதிராக அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளுக்கே அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழாம்: அன்ட்ரே பிளெற்சர், அன்ட்ரே றசல், கார்லொஸ் பிறெத்வெய்ட், கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, எவின் லூயிஸ், ஜேஸன் ஹோல்டர், ஜோன்சன் சார்ள்ஸ், கெரான் பொலார்ட், லென்டில் சிமன்ஸ், மார்லன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி, சுனில் நரைன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .