Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியில், மீண்டும் வீரராக இணைந்து கொள்வதில் சந்தோஷப்படுவேன் எனத் தெரிவித்துள்ள பிராங் லம்பார்ட், வீரராக இணைந்து கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படாவிட்டாலும் செல்சியில் இணைந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரிய கால்பந்தாட்ட லீக் கழகான நியூ யோர்க் சிற்றி கால்பந்தாட்ட கழகத்துடனான இரண்டாண்டுகளைத் தொடர்ந்து, தனக்கான தெரிவுகளை, இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் மத்தியகள வீரரான பிராங் லம்பார்ட் திறந்தே வைத்துள்ளார்.
2014ஆம் ஆண்டு வரையில் 13 ஆண்டுகளாக செல்சியில் இருந்து 211 கோல்களைப் பெற்று, செல்சி சார்பாக அதிக கோல்களைப் பெற்றவராக பிராங் லம்பார்ட் இருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .