Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்துக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவதற்கான லூயிஸ் ஹமில்டனுக்கு, ஒரு வாரத்தில் கிடைத்த இரண்டாவது அடியாக, சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க், ஜப்பானிய கிரான்ட் பிறிக்ஸை வென்றதுடன், ஹமில்டன் மூன்றாவது இடமே பெற்றார்.
பந்தயத்தை, இரண்டாவது நிலையிலிருந்து ஆரம்பித்த பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், மோசமான ஆரம்பத்தின் காரணமாக, எட்டாவது இடத்துக்கு பின்தங்கியபோதும், ஆக்ரோஷமான செலுத்துகை, உத்தி காரணமாக மீழெழுந்த போதும் றொஸ்பேர்க்கினை முந்தமுடிந்திருக்கவில்லை.
இந்த வெற்றியுடன் சேர்த்து, இவ்வருடத்தில், றொஸ்பேர்க், ஒன்பதாவது வெற்றியைப் பெற்று, ஹமில்டனை விட 33 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளார். இதனால், இன்னும் மீதமிருக்கின்ற நான்கு பந்தயங்களில் 100 புள்ளிகளே இருக்கின்ற நிலையில், எஞ்சியிருக்கின்ற அனைத்துப் பந்தயங்களிலும் ஹமில்டனுக்குப் பின்னால் இரண்டாமிடத்தைப் பெற்றாலும், இவ்வருடத்துக்கான போர்மியுலா வண் பட்டத்தை ஹமில்டன் கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பந்தயத்தின் ஒன்பது சுற்றுக்கள் மீதமிருக்கையிலேயே, இரண்டாவதாகச் சென்று கொண்டிருந்த, ரெட் புல் அணியின் நெதர்லாந்து அணிச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்டப்பனுக்கு பின்னால், வேகமான காரினையும் புதிய டயர்களையும் கொண்ட ஹமில்டன் வந்தபோதும், அவரை முந்தவிடாமல் செய்து, தனது நிலையைத் தக்க வைத்து, வெர்ஸ்டப்பன் இரண்டாமிடம் பெற்றார்.
இதேவேளை, இப்பந்தயத்தின் முடிவில், கார்த் தயாரிப்பாளர்களுக்கான, இவ்வருடத்துக்கான பட்டத்தை மெர்சிடிஸ் கைப்பற்றியது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago