Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 10 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
செல்சி சார்பாக கோல் பல்மர் இரண்டு கோல்களையும், ஜடோன் சஞ்சோ, என்ஸோ பெர்ணாண்டஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாக, டொமினிக் சொலங்கி, டெஜன் குலுவென்ஸ்கி, சண் ஹெயுங்க்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் புல்ஹாமின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை வில்லியம் சலிபா பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றாஃவுல் ஜிமென்ஸ் பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026