Mithuna / 2024 ஜனவரி 10 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், டொரினோவின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றிருந்தது.
டொரினோ சார்பாக, அந்தோனியோ சனப்ரியா, நிகொலா விளாசிச், அலெஸான்ட்ரோ புவொங்ஜியோர்னோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் றோமா சமப்படுத்தியது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை போலோ டிபாலா பெற்றதோடு, அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை டெயும் கூப்மெய்னெர்ஸ் பெற்றிருந்தார்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026