Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூலை 07 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, கிரெனடாவில் வியாழக்கிழமை (03) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (06) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியை வென்றமையையடுத்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, ஷாமர் ஜோசப் (2), அல்ஸாரி ஜோசப்பிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. அலெக்ஸ் காரி 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
பதிலுக்கு 277 ஓட்டங்களை வெற்றியிலக்க்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஜொஷ் ஹேசில்வூட் (2), மிற்செல் ஸ்டார்க் (3), பியூ வெப்ஸ்டர், அணித்தலைவர் பற் கமின்ஸ், நேதன் லையனிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களையே பெற்று 133 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அணித்தலைவர் றொஸ்டன் சேஸ் 34, ஷாமர் ஜோசப் 24 ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக காரி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
3 hours ago