Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ். மாவட்டத்தில் முதன்முதலாக தமிழ்நாடு இளையோர் அணிக்கும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சிநேக பூர்வ கரப்பந்தாட்ட போட்டி நேற்று (04) இரவு புத்தூர் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்றது.
கரப்பந்தாட்ட ரசிகர்கள் புடைசூழ இந்த போட்டி வெகு விமர்சையாகவும் பலத்த எதிர்பார்ப்புடனும் இடம்பெற்றது.
இந்தப் போட்டியினை இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கமம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
மூன்றுக்குப் பூச்சியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு இளையோர் அணி போட்டியை வெற்றி கொண்டது.
முதலாவது சுற்றில் 25க்கு 18, இரண்டாவது சுற்றில் 25:21 என்ற அடிப்படையிலும் , பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சுற்றில் யாழ் மாவட்ட அணி, 25 23 என்ற அடிப்படையில் தோல்வியை தழுவிக் கொள்ள கரப்பந்தாட்ட போட்டி தமிழ்நாடு இளைஞர் அணி தன தாக்கிக் கொண்டது.
உலக தரவரிசை லிப்ரோ வீரர்கள் 2 உள்ளடங்களாக 14 பேர் கொண்ட இந்திய அணி குழாம் இந்த போட்டியில் பங்கு பெற்றிருந்தமை பெறும் சிறப்பம்சம்.
யாருக்கும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டும் வகையிலும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட அணியினர் தமது பந்து எறிதலல மிகவும் கச்சிதமாக மேற்கொண்டிருந்தனர்.
எனினும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ரசிகர்களின் கனவினை தவிடு பொடியாக்கியது.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago