Editorial / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 22 இடங்கள் முன்னேறிய திஸர பெரேரா 65ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சதம், அரைச்சதம் பெற்றதைத் தொடர்ந்தே திஸர பெரேராவின் குறித்த முன்னேற்றம் நிகழ்ந்ததுடன், இத்தொடரில் இலங்கை சார்பாக ஓட்டங்களைப் பெற்ற நிரோஷன் டிக்வெல்ல, குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோரும் முன்னேறியுள்ளார்.
டிக்வெல்ல, ஓரிடம் முன்னேறி 26ஆம் இடத்தை அடைந்துள்ளதோடு, ஏழிடங்கள் முன்னேறிய குசல் பெரேரா 66ஆம் இடத்தை அடைந்துள்ளதோடு, 11 இடங்கள் முன்னேறிய தனுஷ்க குணதிலக 82ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்துக்கெதிரான தொடரில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க, மூன்று இடங்கள் முன்னேறி 46ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago