Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான தென்னாபிரிக்கக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், கடந்தாண்டு முழங்கால் காயத்துக்குள்ளாகி, குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் தனது உடற்றகுதியை நிரூபித்த இளம் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி இடம்பெற்றுள்ளார்.
இதுதவிர, வேகப்பந்துவீச்சாளர் அன்றிச் நொர்ட்ஜே முதற்தடவையாக தென்னாபிரிக்கக் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த குழாமில் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் ஹஷிம் அம்லா, விக்கெட் காப்பாளர் ஹென்றிச் கிளாசென் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
தென்னாபிரிக்க, இலங்கையணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஜொஹன்னஸ்பேர்க்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
குழாம்: பப் டு பிளெஸி (அணித்தலைவர்), குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), றீஸா ஹென்ட்றிக்ஸ், இம்ரான் தாஹீர், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்றிச் நொர்ட்ஜே, அன்டிலி பெக்லுவாயோ, டுவைன் பிறிட்டோறியஸ், ககிஸோ றபாடா, தப்ரையாஸ் ஷம்சி, டேல் ஸ்டெய்ன், ரஸி வான் டர் டுஸன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago