Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் முன்னிலையிலுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். தென்னாபிரிக்கா சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய லுங்கி என்கிடியை வியான் முல்டர் பிரதியிட்டிருந்தார்.
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பாகிஸ்தான், கேஷவ் மஹராஜ் (2), அன்றிச் நொர்ட்ஜேயிடம் (1) விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்தபோதும், மழையால் நேற்று முற்கூட்டியே ஆட்டம் நிறைவுக்கு வந்தபோதும் பாபர் அஸாமின் ஆட்டமிழக்காத 77, பவட் அலாமின் ஆட்டமிழக்காத 42 ஓட்டங்களால் 3 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பெற்றுள்ளது.
27 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
53 minute ago