Shanmugan Murugavel / 2024 நவம்பர் 26 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டேர்பனில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் இலங்கையும், தென்னாபிரிக்காவும் காணப்படுகின்ற நிலையில் இத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
தென்னாபிரிக்காவென்றாலே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதா ஆடுகளங்களென்ற நிலையில் குறிப்பிடத்தக்க ஆடுகளங்களை கோருவதில்லையென தென்னாபிரிக்க அணித்தலைவர் தெம்பா பவுமா தெரிவித்திருந்தாலும் ஆரம்பத்தில் டேர்பன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகக் காணப்பட்டு பின்னர் மெதுவாகுமெனத் தெரிகிறது.
தென்னாபிரிக்காவைப் பொறுத்த வரையில் மார்கோ ஜன்சன், வியான் முல்டர், கேஷவ் மஹராஜ், ககிஸோ றபாடாவுடன் ஜெரால்ட் கொயட்ஸி களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்த வரையில் மிலான் ரத்னாயக்க, பிரபாத் ஜெயசூரியா, அசித பெர்ணாண்டோவுடன், விஷ்வ பெர்ணாண்டோ களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025