R.Tharaniya / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நோன்பு பெருநாளை முன்னிட்டுவருடந்தோறும் நடாத்தப்படுகின்ற மெதகெகில பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக முஹம்மட் அஜ்மிர் தலைமையிலான வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவானது.
முஹம்மட் ஸனீர் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே இவ்வாறு வெஸ்டர்ன் வொரியஸ் அணி வெற்றி வாகை சூடியது.
மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஏப்ரல் 02, 03ம் திகதிகளில் இடம்பெற்ற இந்த தொடரில் மொத்தம் 08 அணிகள் மோதின.
லீக் முறையில் இடம்பெற்ற இந்த தொடரில் தமது முதல் 03 போட்டிகளிலும் தோல்வியினை தழுவி தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்த பெரோனி தலைமையிலான சுபர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டது.
இந்த தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களை பிரபல சமூக சேவையாளர் கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.




52 minute ago
59 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
3 hours ago
05 Nov 2025