Shanmugan Murugavel / 2016 நவம்பர் 21 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், வாயில் இனிப்பொன்றை வைத்துக் கொண்டு, தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸி, பந்தை மினுக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் சர்ச்சைகள் தொடர்கின்றன.
பிளெஸி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அடிலெய்ட் விமான நிலையத்தில் வைத்து, பிளெஸியிடம் கருத்துக் கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரியால் தள்ளப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டார். சனல் 9 தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான வில் குறௌச் என்பவரே, இவ்வாறு ஆக்ரோஷமான முறையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சனல் 9இன் கருத்துப்படி, மெல்பேணில் வைத்து பிளெஸியிடம் கருத்துக் கேட்க முனைந்த போது, தங்களது இன்னோர் ஊடகவியலாளரும், இதே பாணியில் அதே பாதுகாப்பு அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. பிளெஸி சம்பந்தமான காணொளியை வெளியிட்டு, இந்தச் சர்ச்சையை, சனல் 9 தொலைக்காட்சியே ஆரம்பித்து வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லா, "ஏமாற்றமடைந்துள்ளேன். செய்தியாளர்களிடமிருந்து இவ்வாறான தூண்டலேற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள். ஒருவர் அமைதியாகச் செல்ல அனுமதியுங்கள். நல்ல குணத்துடனும் மரியாதையுடனும் கேளுங்கள். உங்களுக்கு அனேகமாகமாகப் பதிலொன்று கிடைக்கும்" என்றார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, இவ்விடயம் தொடர்பாக பிளெஸி கருத்துத் தெரிவிக்க மாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், மூன்று முறை அறிவுறுத்தப்பட்ட பின்னரும், அணித்தலைவரை நோக்கிச் சென்றமை, அப்பட்டமான மரியாதையின்மையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
22 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
1 hours ago