Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில் மெளன்ட் மகட்டரேயில் சனிக்கிழமை (04) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜொஸ் ஹேசில்வூட் (2), ஷோன் அபொட் (3), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஸ்கேவியர் பார்ட்லெட் (2), அடம் ஸாம்பாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டிம் செய்ஃபேர்ட் 48 (35), மிஷெல் பிறேஸ்வெல்லின் 26 (22), ஜேம்ஸ் நீஷ்அமின் 25 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஜேக்கப் டஃபி (2), ஜேம்ஸ் நீஷம் (4), பென் சியர்ஸிடம் விக்கெட்டுகளை வரிசையாகப் பறிகொடுத்தபோது அணித்தலைவர் மிற்செல் மாஷின் ஆட்டமிழக்காத 103 (52) ஓட்டங்களோடு 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியினதும், தொடரினதும் நாயகனாக மாஷ் தெரிவானார்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago