Shanmugan Murugavel / 2025 மார்ச் 26 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் தன்னைக் கருத்திற் கொள்ள வேண்டாமென கேன் வில்லியம்சன் கேட்டுக் கொண்ட நிலையில் அவர் குழாமில் தெரிவு செய்யப்படவில்லை.
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதன் காரணமாக றஷின் றவீந்திர, மிற்செல் சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ், டெவோன் கொன்வே, லொக்கி பெர்கியூசன் ஆகியோர் குழாமில் தெரிவு செய்யப்படவில்லை.
காயங்களிலிருந்து குணமடைவதன் காரணமாக மற் ஹென்றியும், பணிச்சுமை நிர்வாகம் காரணமாக கைல் ஜேமிஸனும் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: டொம் லேதம் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), முஹமட் அப்பாஸ், ஆதித்யா அஷோக், மிஷெல் பிறேஸ்வெல், மார்க் சப்மன், ஜேக்கப் டஃபி, மிற்ச் ஹே (விக்கெட் காப்பாளர்), நிக் கெல்லி, டரைல் மிற்செல், வில் ஓ ருர்க், பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், வில் யங்க்.
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago