Shanmugan Murugavel / 2015 நவம்பர் 17 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம், மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதன்படி, இப்போட்டியின் முதல் நாளைத் தவிர ஏனைய மூன்று நாட்களும் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன.
மழை காரணமாகப் போட்டியை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்பட்டது.
எனினும், ஒரு கட்டத்தில் மழை நின்றதன் காரணமாக, 2 மணிக்குப் போட்டி ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்ட போதும், மீண்டும் தூறல் ஏற்பட, போட்டியை ஆரம்பிக்க முடியாது போனது.
முதல்நாளில், இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், 2-0 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலைபெறும் வாய்ப்பு, அவ்வணிக்கு இல்லாமல் போயுள்ளதாகக் கருதப்படுகின்றது.
நாளையும் மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago