Shanmugan Murugavel / 2016 நவம்பர் 27 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில், நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஹமில்டனில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களுடன் இன்றைய 3ஆவது நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, பின்வரிசை வீரர்களின் ஓரளவு போராட்டத்துடன், 216 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 90, சப்ராஸ் அஹ்மட் 41, சொஹைல் கான் 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டிம் சௌதி 80 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் நீல் வக்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
55 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸை விளையாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி, முதலாவது பந்தை விளையாடியதுமே மழை குறுக்கிட்டதால், இன்றைய நாள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
1 hours ago