Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, டேர்பனில் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் ஃபஃப் டு பிளெசிஸ், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்திருந்த நிலையில், முதலாம் நாள் ஆட்ட முடிவில், எட்டு விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று தென்னாபிரிக்கா அணி தடுமாறி வருகிறது.
தற்போது களத்தில் கஜிஸ்கோ ரபடா 14 ஓட்டங்களுடனும் டேல் ஸ்டெயின் இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, ஹஷிம் அம்லா 53, டெம்பா பவுமா 46, குயின்டன் டி கொக் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், நீல் வக்நர் மூன்று விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், மிற்செல் சந்தர் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் டவ் பிரேஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago