Shanmugan Murugavel / 2026 மார்ச் 25 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் அணித்தலைவர் ஹபிபுல் பஷாரை அந்நாட்டு கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. பெப்ரவரியில் பதவிக் காலம் முடிந்த கஸி அஷ்ரஃப்பை பஷார் பிரதியிட்டுள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டிலிருந்து 11 ஆண்டுகளாக தேர்வாளரொருவராகக் காணப்பட்ட பஷார், பின்னர் ஓராண்டாக பெண்கள் அணியை தலைமை தாங்கி வழிநடத்தி, தொடர்ந்து வயதுக் குழு கிரிக்கெட் தலைவராகக் காணப்பட்டிருந்தார்.
அஷ்ரஃப்பின் தேர்வுக் குழுவில் காணப்பட்ட ஹசிபுல் ஹொஸைனை தேர்வுக் குழுவில் கிரிக்கெட் சபை தக்க வைத்ததுடன், முன்னாள் வீரர்களான நயீம் இஸ்லாம், நடிஃப் செளத்ரி ஆகியோரை தேர்வுக் குழுவில் இணைத்துள்ளது.
கடந்த மாதம் தேர்வுக் குழுவுக்கு கிரிக்கெட் சபை விளம்பரப்படுத்திய நிலையில், முன்னாள் வீரர்களாக ஜாவீட் ஓமர், மொஹமட் றஃபீக் ஆகியோர் நேர்காணல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2027 உலகக் கிண்ணம் வரையில் தேர்வுக் குழுவின் பதவிக் காலம் காணப்படுகின்றது.
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago