Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் பிற்பாடு, பங்காளாதேஷின் தலைமைப் பயிற்றுவிப்பாளராவதற்குரிய போட்டியாளராக இலங்கையணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மாறலாம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்துள்ளநிலையில், பங்களாதேஷின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க மீள நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து தமது தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் றொட்ஸை பங்களாதேஷ் பிரிந்த நிலையில் இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் காலிட் மஹ்மூட் பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில், பங்களாதேஷின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை பணியாற்றிய ஹத்துருசிங்க மீண்டும் அப்பணிக்குத் திரும்புவது இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து அவர் எவ்வாறு விலகுகின்றார் என்பதிலேயே தங்கியுள்ளது.
பங்களாதேஷுக்கெதிரான தொடரின் பின்னர் தத்தமது பதவிகளிலிருந்து ஹத்துருசிங்கவையும், ஏனைய பயிற்றுவிப்பாளர்களையும் விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை வினவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஏறத்தாழ இன்னும் 16 மாதங்களைக் கொண்ட ஹத்துருசிங்கவின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமிடத்து பாரியதொரு தொகையை அவருக்கு இலங்கை கிரிக்கெட் சபை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைமைப் பயிற்றுவிப்பாளரொருவர், வேகப்பந்துவீச்சாளரொருவர், பெளதிக நிபுணரொருவரை கண்டுபிடிப்பதற்கான நடைமுறையைத் தாங்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நஸ்முல் ஹஸன், தங்களது தற்போதைய பணிகளிலுள்ள வேறு சில பயிற்சியாளர்களுடனும் தாங்கள் பேச்சுக்களில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
3 hours ago
5 hours ago