Shanmugan Murugavel / 2016 ஜனவரி 13 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) செயலாளர் நாயகம் ஜெரோம் வால்கி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அச்சம்மேளனம் அறிவித்துள்ளது. பீபாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் ஓர் அங்கமாகவே, இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்ற மோசடிகளில் அவருக்குக் காணப்பட்டதாகக் கூறப்படும் தொடர்பு காரணமாக, தற்காலிகத் தடைக்கு அவர் உள்ளாகியிருந்த நிலையிலேயே, அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பல்வேறான குற்றச்சாட்டுகள் அவர் மீது காணப்படுகின்ற போதிலும், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்ததில் காணப்பட்டதாகக் கூறப்படும் தொடர்பு முக்கியம் பெறுகிறது.
வால்கி, கடந்தாண்டு செப்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து தற்காலிகத் தடைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். ஆனால், நேற்றுக் கூடிய சம்மேளனத்தின் அவசர செயற்குழு, பீபாவிலிருந்து அவரை நீக்கும் முடிவை எடுத்தது.
சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டர், உப தலைவர் மைக்கல் பிளட்டினி ஆகியோருக்கு, தலா 8 வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago