Shanmugan Murugavel / 2016 நவம்பர் 17 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், வாயில் இனிப்பொன்று இருக்கும் போது, அதன் உதவியுடன் பந்தை மினுக்கச் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபப் டு பிளெஸி மீது நடவடிக்கை எடுப்பதா என, சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகிறது.
பந்தை அவர் அவ்வாறு மினுக்கச் செய்யம் காட்சிகள், ஊடகங்களால் வெளியிடப்பட்டமையைத் தொடர்ந்தே, இவ்விடயம் தொடர்பாக ஆராயப்படுவதோடு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, இது தொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே 2013ஆம் ஆண்டில், அவரது காற்சட்டையில் காணப்பட்ட 'சிப்'பில் பந்தைத் தேய்த்தமைக்காக, ஃபப் டு பிளெஸியின் போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago