Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செல்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு ஜுவென்டஸ் தகுதி பெறுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகின்ற நிலையில், வாரத்துக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்றளவிலான கிறிஸ்டியானோவின் ஊதியத்தை சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறாவிட்டால் ஜுவென்டஸ் வழங்குவது கடினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்தவகையிலேயே, கிறிஸ்டியானோவின் முன்னாள் கழகமான இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர்டர் யுனைட்டெட்டும் அவரைக் கைச்சாத்திட போட்டியில் உள்ளபோதும், கிறிஸ்டியானோவைக் கைச்சாத்திட பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலையிலுள்ளதாகக் கூறப்படுகிறது.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago