Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் பராஒலிம்பிக் போட்டிகளில், பதக்கங்களின் பட்டியலில் சீனா, முதலிடத்தில் காணப்படுகிறது. 07ஆம் திகதி ஆரம்பித்த இப்போட்டிகளின் 4ஆவது நாள் முடிவிலேயே இந்நிலைமை காணப்படுகிறது.
26 தங்கங்கள், 24 வெள்ளிகள், 19 வெண்கலங்களைப் பெற்றுள்ள சீனா, 69 பதக்கங்களுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. 15 தங்கங்களுடன் பெரிய பிரித்தானிய அணி இரண்டாமிடத்திலும் 12 தங்கங்களுடன் உக்ரைன் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தொடர்ந்துவரும் இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (08), பிரேஸில் (5), நெதர்லாந்து (4), ஜேர்மனி (4), உஸ்பெகிஸ்தான் (4), துனிஷியா (4), மெக்ஸிக்கோ (4) ஆகியன காணப்படுகின்றன.
இந்திய அணி, ஒரு தங்கம், ஒரு வெண்கலத்துடன் 32ஆவது இடத்தில் காணப்படுகிறது. இந்த இரண்டு பதக்கங்களுமே, சனிக்கிழமை இடம்பெற்ற உயரம் பாய்தல் போட்டிகளில் பெறப்பட்டன. முழங்காலுக்கு மேல், ஒரு காலில் அங்கவீனத்தைக் கொண்டவர்களுக்கான டி42 வகைப் போட்டிகளில், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, 1.89 மீற்றர்கள் உயரம் பாய்ந்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அதே போட்டியில் 1.86 மீற்றர்கள் உயரம் பாய்ந்த பாதி வருண் சிங், வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .