Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுக்கான பலூன் டி ஓர்-இன் 30 பேர் கொண்ட குறும்பட்டியல் நேற்றுத் திங்கட்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ள நிலையில், உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக முடிசூடுவதற்கான மோதலை, கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லியனல் மெஸ்ஸியும் மீண்டும் தொடங்கியுள்ளனர்.
2007ஆம் ஆண்டு, குறித்த விருதினை, அப்போது ஏ.சி மிலான் கழகத்தில் இருந்த பிரேஸில் வீரரான காகா வென்ற பின்னர், சாதனை ரீதியாக, ஐந்தாவது முறை, குறித்த விருதை கடந்த வருடம் வென்ற பார்சிலோனாக் கழகத்தின் ஆர்ஜென்டின வீரரான மெஸ்ஸி அல்லது மூன்று முறை இவ்விருதை வென்ற றியல் மட்ரிட் கழகத்தின் போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரே, இவ்விருதை தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் வேல்கின்றனர்.
இப்பருவகால ஆரம்பத்தில், தனது வழமையான ஆட்டத்தை ரொனால்டோ வெளிப்படுத்தாதபோதும், போர்த்துக்கல்லுக்கு யூரோ 2016 பட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததுடன், றியல் மட்ரிட்டுக்கு சம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றுக் கொடுத்து, விருதைப் பெறுவதில், முதன்மையானவராக ரொனால்டோ விளங்குகிறார். ரொனால்டோ தவிர, கரித் பேல், டொனி க்ரூஸ், லூகா மொட்ரிக், சேர்ஜியோ றாமோஸ், பெப்பே ஆகியோர், றியல் மட்ரிட்டிலிருந்து, விருதுக்கான இடம்பெற்றுள்ளனர். விருதுக்கான பட்டியலில், றியல் மட்ரிட்டின் வீரர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.
பார்சிலோனாவில், மெஸ்ஸியுடன் இணைந்து, இவ்வாண்டு, தமக்கிடையே 100 கோல்களைப் பெற்ற, நேமர், லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன், அன்ரே இனியஸ்டாவும், விருதுக்கான பட்டியலில் உள்ளனர். இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றியிலிருந்து ஜேமி வார்டி, றியாட் மஹ்ரேஸ் ஆகியோரும் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மஹ்ரேஸ் தவிர, பொரிஸியா டொர்ட்டமுண்ட் கழகத்தின் முன்கள வீரரான பியரி எமெரிக் அயூப்மெயாங் மட்டுமே, ஐரோப்பா அல்லது தென் அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து இடம்பெற்ற வீரர்கள் ஆவார்.
பிரான்ஸிலிருந்து, அந்தோனி கிறீஸ்மன், ஹியூகோ லோரிஸ், திமித்ரி பயேட், போல் பொக்பா ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோடு, ஆர்ஜென்டீனாவிலிருந்து, மெஸ்ஸி தவிர, கொன்ஸலோ ஹியூகைன், சேர்ஜியோ அக்ரோ, போலோ டயாபலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, இத்தாலியின் ஜிஞ்சலி புபான், மன்செஸ்டர் சிற்றியின் கெவின் டி ப்ரூனே, அத்லெட்டிகோ மட்ரிட்டின் டியகோ கோடின், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஸல்டான் இப்ராஹிமோவிக், பெயார்ண் மியூனிச்சின் ரொபேர்ட் லெவன்டோஸ்கி, ஆர்டுரோ விடால், ஜேர்மனியின் மனுவல் நோயர், தோமஸ் முல்லர் ஆகியோரும் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் கால்பந்தாட்ட சஞ்சிகையினால், 1956ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருதின் வெற்றியாளர், எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக, பீபா பலூன் டி ஓர் ஆகவே இவ்விருது இருந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் முதல், இவ்விருதுடனான தனது இணைப்பினை, பீபா விலத்திக் கொண்டது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago