Editorial / 2018 ஜனவரி 22 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 7 விக்கெட்டுகளால் நியூசிலாந்து வென்றுள்ளது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாபர் அஸாம் 41 (41), ஹஸன் அலி 23 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் செளதி, செத் றான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மிற்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 106 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், கொலின் மன்றோ ஆட்டமிழக்காமல் 49 (43), டொம் ப்ரூஸ் 26(22), றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 22 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ருமான் றயீஸ் 2, ஷடாப் கான் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக கொலின் மன்றோ தெரிவானார்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026