Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, ராவல் பின்டியில் இலங்கை நேரப்படி நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கின்றது.
முதலாவது போட்டியை பாகிஸ்தான் வென்ற நிலையில் இப்போட்டியையும் வென்றால் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், தற்போதிருக்கும் ஏழாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்துக்கு முன்னேற முடியும். மறுபக்கமாக, வெற்றி தோல்வியின்றி போட்டியை முடித்தால் அல்லது தோற்றாலும் ஆறாம் இடத்துக்கு பாகிஸ்தான் முன்னேறும்.
இதேவேளை, ஐந்தாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்கா, ஆறாமிடத்துக்கு கீழிறங்குவதைத் தடுப்பதற்கு தோல்வியைத் தவிர்க்க வேண்டியுள்ளது.
தென்னாபிரிக்கா சார்பாக முதலாவது போட்டியில் விளையாடிய ஜோர்ஜ் லின்டிக்குப் பதிலாக தப்ரையாஸ் ஷம்சி களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதுடன், லுங்கி என்கிடிக்குப் பதிலாக வியான் முல்டர் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில், முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 minute ago
32 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
35 minute ago
42 minute ago