Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறென்ஃபோர்ட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.
லிவர்பூல் சார்பாக மிலோஸ் கெர்கெஸ், மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறென்ஃபோர்ட் சார்பாக டங்கோ ஒளட்டாரா, கெவின் ஷாடே, இகோ தியாகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற சதர்லேண்டுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஜான்ட்ரோ கர்னாச்சோ பெற்றதோடு, சதர்லேண்ட் சார்பாக வில்சன் இசிடோர், செம்ஸ்டினே தல்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
3 minute ago
12 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
26 minute ago