Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் ரைடர்ஸ் எசோஸியேசன் நிறுவனம் ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் விளையாட்டு போட்டிகள், புத்தளம் இஜ்திமா மைதானத்தில் சனிக்கிழமை (19) மாலை இடம் பெற்றது.
இந்த போட்டிகள் யாவும் கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று இஜ்திமா மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்ந போதிலும் கூட மழையின் காரணமாக இந்த போட்டி பிற்போடப்பட்டிருந்தது.
புத்தளம் நகரில் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இந்த பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையிலே இந்த முறை நடைபெற்ற இந்த போட்டியிலே மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டர் குரோஸ் ஓட்ட போட்டிகள், அரை கரத்தை மற்றும் ரேஸ் கரத்தை ஓட்டம், வாலிபர் சைக்கிள் ஓட்டம், குதிரை ஓட்டம், முச்சக்கர வண்டி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
புத்தளம் ரைடர்ஸ் எசோஸியேசன் தலைவரும், பிரபல முன்னாள் தேசிய மட்ட ரைடருமான எம்.எப். எம்.பைரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விலே அரசியல் பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், தொழில் அதிபர்கள், நலன் விரும்பிகள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள்.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டன.
எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
28 minute ago
44 minute ago