Editorial / 2025 ஜூன் 12 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் கிரிக்கெட் போட்டியில் 2020ஆம் ஆண்டு சாதாரண தர வகுப்பு அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 07, 08 மற்றும் 09திகதிகளில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஒவ்வொரு வருடங்களின் சாதாரண தர வகுப்புகளை சேர்ந்த 33 அணிகள் பங்குபற்றின.
இதில் இறுதிப் போட்டிக்கு 2020 மற்றும் 2004ஆம் ஆண்டு அணிகள் தெரிவாகியதுடன், இறுதிப் போட்டியில் வென்று 2020ஆம் ஆண்டு அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இதேவேளை 2004ஆம் ஆண்டு அணி இரண்டாம் இடத்தையும், 1997ஆம் ஆண்டு அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
பழைய மாணவர்களின் ஒன்றுகூடலாக மூன்றாவது தடவையாகவும் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் நன்றிகளை கூறிக்கொள்வதாக பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.


27 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago