Shanmugan Murugavel / 2026 ஜனவரி 15 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் நஸ்முல் இஸ்லாம் தனது பதவியை இராஜினாமா செய்யாவிடின் நாடாளவிய ரீதியில் அனைத்து வகையிலான புறக்கணிப்பொன்றுக்கு வீரர்களின் நலனோன்பு கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அந்தவகையில் பங்களாதேஷ் பிறீமியர் லீக்கானது இச்செய்தி எழுதப்படும் வரையில் தாமதித்திருந்ததுடன், டாக்கா கிரிக்கெட் லீக்கின் நான்கு முதற்தரப் போட்டிகளும் இன்று (15) ஆரம்பித்திருக்கவில்லை.
புதன்கிழமை (14) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் நஸ்முல்லிடம் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் விளையாடா விட்டால் ஏற்படும் நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வினவபட்டபோது, வீரர்களுக்கே பாதிப்பு எனவும், கிரிக்கெட் சபைக்கு பாதிப்பில்லையென்றும், அவர்கள் பங்கேற்கா விட்டால் அவர்களுக்கு இழப்பீடு இல்லையெனவும், தாங்கள் அவர்களுக்கு செலவளித்த கோடிக்கணக்கான பணத்தை தாங்கள் கேட்கின்றோமா எனக் கூறியிருந்தார்.
47 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
4 hours ago