Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த அவுஸ்திரேலியா, கன்பெராவில் இன்று நடைபெற்ற போட்டியில் தோற்றபோதும் தொடரை 1-2 எனக் கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஹர்டிக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 92 (76), இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 66 (50), அணித்தலைவர் விராட் கோலியின் 63 (78) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 303 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக, அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் 75 (82), மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 22 (31), கமரொன் கிறீன் 21 (27), அலெக்ஸ் காரி 38 (42), கிளென் மக்ஸ்வெல் 59 (38), அஸ்தன் அகர் 28 (28) என ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
எனினும் எவரும் இறுதி வரை நிலைத்து நின்றிருக்காத நிலையில், இந்தியா சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட தமிழ்நாடு வீரர் தங்கராசு நடராஜன் (2), ஷர்துல் தாகூர் (3), இரவீந்திர ஜடேஜா (1), குல்தீப் யாதவ் (1), ஜஸ்பிரிட் பும்ராவிடம் (2) குறிப்பிட்ட இடைவேளையில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில், 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களையே பெற்ற அவுஸ்திரேலியா 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஹர்டிக் பாண்டியாவும், தொடரின் நாயகனாக ஸ்டீவ் ஸ்மித்தும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
24 minute ago
33 minute ago