2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

போர்த்துக்கல்லை வென்றது பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், போர்த்துக்கல்லில் இன்று அதிகாலை நடைபெற்ற பிரான்ஸுடனான குழு சி போட்டியொன்றில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான போர்த்துக்ல் தோற்றது.

பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை என்கலோ கன்டே பெற்றிருந்தார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே குழுவில் முதலிடத்தை உறுதிப்படுத்திய பிரான்ஸ், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் சமப்படுத்தியிருந்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை றெமோ புரூலர் பெற்றதோடு, ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜெரார்ட் மொரெனோ பெற்றிருந்தார். இப்போட்டியில் இரண்டு பெனால்டிகளை ஸ்பெய்னின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில், சுவீடனில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியொன்றில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா தோல்வியடைந்திருந்தது. சுவீடன் சார்பாக, டெஜன் குலுசெவ்ஸ்கி மார்க்கஸ் டேனியல்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .