Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 14 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்மியுலா வண் சம்பியன் பட்டத்தை இரண்டு தடவைகள் கைப்பற்றிய ஸ்பெய்ன் ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோ, இப்பருவகால இறுதியில் போர்மியுலா வண்ணிலிருந்து விலகுவதைக் கருத்திற் கொள்வதாகக் கூறியுள்ளார்.
தனது அணியான மக்கலரென் கடந்த மூன்றாண்டுகளாக மோசமான பெறுபேறுகளைப் பெற்றமையைத் தொடர்ந்தே இன்டி காரோட்டப் பந்தயத்துக்கு முழுமையாக செல்வது குறித்து 36 வயதான பெர்ணான்டோ அலோன்ஸோ ஆலோசிக்கிறார்.
தமக்கு பிரச்சினை கொடுத்த ஹொன்டா இயந்திரங்களை றெனோல்ட் இயந்திரங்களால் பிரதியீடு செய்துள்ள மக்கலரென் அணி மீண்டும் பெர்ணான்டோ கைச்சாத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பருவகாலத்துக்கு முந்தையதான சோதனையின்போது பெர்ணான்டோ அலோன்ஸோ இரண்டாவது வேகமானவராகக் காணப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது காலத்தின் மிகச் சிறந்ததொரு ஓட்டுநராகக் கருதப்படும் பெர்ணான்டோ அலோன்ஸோ, கடந்த பருவகாலத்தில் 17 புள்ளிகளுடன் 15ஆம் இடத்தையே பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
14 Jul 2025
14 Jul 2025