Shanmugan Murugavel / 2016 நவம்பர் 20 , மு.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறிஸ்சேர்ச்சில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், எட்டு விக்கெட்டுகளால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
69 ஓட்டங்கள் முன்னிலையுடன், தமது இரண்டாவது இனிங்ஸில் ஏழு விக்கெட்டுகளையிழந்து 129 ஓட்டங்களுடன் இன்றைய நான்காவது நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களையே முன்னிலையாகப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பாகிஸ்தான் அணி சார்பாக, சொஹைல் கான் 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், நியூசிலாந்து அணி சார்பாக, நீல் வக்னர், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 105 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், நியூசிலாந்து அணி சார்பாக, கேன் வில்லியம்ஸன் 61, ஜீட் றாவல் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், அஸார் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஸ்கோர் விவரம்...
பாகிஸ்தான்: 133/10 (துடுப்பாட்டம்: மிஸ்பா உல் ஹக் 31. பந்துவீச்சு: கொலின் டி கிரான்ட்ஹொம் 6/41)
நியூசிலாந்து: 200/10 (துடுப்பாட்டம்: ஜீட் றாவல் 55. பந்துவீச்சு: ரஹாட் அலி 4/62, மொஹமட் ஆமிர் 3/43, சொஹைல் கான் 3/78)
பாகிஸ்தான்: 171/10 (துடுப்பாட்டம்: சொஹைல் கான் 40, அஸார் அலி 31. பந்துவீச்சு: நீல் வக்னர் 3/34, ட்ரெண்ட் போல்ட் 3/37, டிம் சௌதி 3/53)
நியூசிலாந்து: 108/2 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் 61, ஜீட் றாவல் ஆ.இ 36. பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 1/12, அஸார் அலி 1/6)
போட்டியின் நாயகன்: கொலின் டி கிரான்ட்ஹொம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .