Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 06 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், தனது 4ஆவது சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று, காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த ரொஜர் பெடரரின் சாதனையை முறியடித்துள்ளார்.
செரினாவின் இந்த வெற்றி, கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் அவருக்குக் கிடைத்த 308ஆவது வெற்றியாகும். இதன்மூலம், கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் 307 போட்டிகளில் வென்று, உலக சாதனையைத் தன்வசம் வைத்திருந்த ரொஜர் பெடரரின் சாதனையை, செரினா முறியடித்தார்.
நவீனகால டென்னிஸ் வரலாற்றில் முக்கியமான வீரராகக் கருதப்படும் ரொஜர் பெடரரின் சாதனையை முறியடித்தமை குறித்துக் கருத்துத் தெரிவித்த செரினா, "இது மிகவும் சிறப்பானது. 308 என்பது, மிகவும் சிறப்பாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.
52ஆம் நிலை வீராங்கனையான கஸக்ஸ்தானைச் சேர்ந்த யாரோஸ்லாவா ஷ்வேடோவாவை, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தே இந்த வெற்றியை செரினா பெற்ற நிலையில், அவருக்குக் காணப்பட்ட மற்றொரு சவாலும் இல்லாது போயுள்ளது.
அவரது முதலிடத்தைக் குறிவைத்துவந்த இரண்டு பேரில் ஒருவரான 4ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா, குரோஷியாவைச் சேர்ந்த 18 வயது வீராங்கனையான அனா கொன்ஜுவிடம், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். விம்பிள்டன் போட்டிகளில், ரட்னவன்ஸ்காவை விட முன்னிலையில் இருந்த அனா, பின்னர் காயம் காரணமாக அப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அத்தோல்விக்குப் பழிவாங்கும் வெற்றியாக, இவ்வெற்றி அமைந்தது.
5ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 11ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரும் வெற்றிபெற்றனர். இதில், 6ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கரோலினாவிடம் தோல்வியடைந்திருந்தார்.
ஆண்களுக்கான போட்டிகளில், உலகின் இரண்டாம் நிலை வீரரான பெரிய பிரித்தானியாவின அன்டி மரே, 3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, 6ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி ஆகியோர், தங்களது 4ஆம் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று, காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றனர்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026