Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூரில் இடம்பெற்றுவரும் டபிள்யூ.டி.ஏ இறுதிப் போட்டிகள் தொடரின் போட்டியொன்றில், நடப்புச் சம்பியனும் உலகின் 3ஆம் நிலை வீராரங்கனையுமான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்காவை எதிர்கொண்ட ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்னெட்ஸோவா, வெற்றிபெற்றார்.
குழு நிலையில் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இப்போட்டியில் முதலாவது செட்டை 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய குஸ்னெட்ஸோவா, இரண்டாவது செட்டை 1-6 என இழந்தார்.
தீர்க்கமான மூன்றாவது செட் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, நடுவரிடம் சென்று, கத்தரிக்கோலொன்றைப் பெற்றுக் கொண்ட குஸ்வெனட்ஸோவா, தனது தலைமுடியை வெட்டி எறிந்துவிட்டுப் போட்டியைத் தொடர்ந்தார். அந்த செட்டை, கடுமையான போராட்டங்களுக்குப் பின்பு 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அவர், நடப்புச் சம்பியனை வீழ்த்தினார்.
தனது தலைமுடியை வெட்டியமை தொடர்பாகத் தெரிவித்த அவர், "அது எனக்கு, மிகவும் தொல்லையாக இருந்தது. எனது தலையோடு அதை முடிந்துகொள்ள முயன்றேன். ஆனால் எனது தலைமுடி, மிகவும் தடிப்பானதோடு அதிகமானது. எனது முன்னங்கையால் தான் அடிக்கும் ஒவ்வொரு தடவையும், எனது தலைமுடி, எனது கண்களில் அடிக்கும். எனவே நான், 'சரி, இப்போது முக்கியமானது எது? மீண்டும் வளர்க்கக்கூடிய தலைமுடியா அல்லது போட்டியா?' என்று யோசித்தேன்" என்று குறிப்பிட்டார்.
23 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
1 hours ago