Shanmugan Murugavel / 2016 நவம்பர் 13 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அல்விரோ பீற்றர்சன், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் அல்லது அது சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டார் என, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான ராம் ஸ்லாம் தொடரில், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்டார் அல்லது ஈடுபட முயன்றார்; போட்டி நிர்ணயச் சதியில் ஈடுபட்டார்; போட்டி நிர்ணயத்துக்காக பணத்தைப் பெற்றுக் கொண்டார் அல்லது பெற முயன்றார்; போட்டி நிர்ணயத்துக்கான முயற்சிகள் குறித்துத் தாமதமின்றி முழுமையாக அறிவிக்காமை உட்பட 6 குற்றச்சாட்டுகள், அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அதற்குப் பதிலளித்துள்ள அவர், போட்டி நிர்ணயத்தில் ஈடுபட முன்றார் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எனினும், விசாரணை நடக்கிறது என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பாததன் காரணமாக, போட்டி நிர்ணயத்தில் ஈடுபட்ட வீரர்களுடன் சேர்ந்து செயற்படுவது போன்று நடித்ததாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையால் முன்வைக்கப்பட்ட பேரம்பேசலை அவர் நிராகரித்ததாகவும், அது கடுமையானதாக இருந்ததாகவும் தெரிவித்த அவரது வழக்கறிஞர், இக்குற்றச்சாட்டுகள் மூலமாக, அவர் விடுவிக்கப்படுவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவுக்காக 36 டெஸ்ட்கள், 21 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடிய பீற்றர்சன், 2015ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026