Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையையடுத்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை பும்ரா அடைந்துள்ளார்.
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் குறித்த பங்களாதேஷுக்கெதிரான போட்டியில் 123 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் யஷஷ்வி ஜைஸ்வால், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர இப்போட்டியில் 76 ஓட்டங்களைப் பெற்ற விராட் கோலி, 12ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை இந்தியாவுக்கெதிரான இப்போட்டியில் 29 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
5 minute ago
18 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
51 minute ago