Shanmugan Murugavel / 2024 நவம்பர் 27 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை பும்ரா அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
குறித்த போட்டியில் 161 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் யஷஸ்வி ஜைஸ்வால், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இப்போட்டியில் 100 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் ட்ரெவிஸ் ஹெட், 13ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 68 ஓட்டங்களைப் பெற்றதுடன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ் சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026