Shanmugan Murugavel / 2022 ஜனவரி 03 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பங்களாதேஷ் போராடி வருகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெளன்ட் மகட்டரேயில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இந்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, டெவோன் கொன்வேயின் 122, ஹென்றி நிக்கொல்ஸின் 75, வில் யங்க்கின் 52, றொஸ் டெய்லரின் 31 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 328 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷொரிஃபுல் இஸ்லாம் 3, மெஹிடி ஹஸன் மிராஸ் 3, மொமினுல் ஹக் 2, எபொடொட் ஹொஸைன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், மஹ்முடுல் ஹஸன் ஜோய் 70, அணித்தலைவர் மொமினுல் ஹக் எட்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, 64 ஓட்டங்களுடன் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ ஆட்டமிழந்திருந்தார். வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுகளையும் நீல் வக்னர் வீழ்த்தியிருந்தார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026