Shanmugan Murugavel / 2024 நவம்பர் 24 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பேர்த்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஜொஷ் ஹேசில்வூட் (4), மிற்செல் மார்ஷ் (2), மிற்செல் ஸ்டார்க், அணித்தலைவர் பற் கமின்ஸிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களையே தமது முதலாவது இனிங்ஸில் பெற்றது. துடுப்பாட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி 41, றிஷப் பண்ட் 37, லோகேஷ் ராகுல் 26 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அணித்தலைவர் ஜஸ்பிரிட் பும்ரா (5), ஹர்ஷித் ரானா (3), மொஹமட் சிராஜ்ஜிடம் (2) அடிபணிந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்டார்க் 26, அலெக்ஸ் காரி 21 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, யஷஸ்வி ஜைஸ்வாலின் 161, விராட் கோலியின் ஆட்டமிழக்காத 100, ராகுலின் 77, ரெட்டியின் ஆட்டமிழக்காத 38, வொஷிங்டன் சுந்தரின் 29, தேவ்டுட் படிக்கல்லின் 25 ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 487 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில் நேதன் லையன் 2, ஹேசில்வூட், மார்ஷ், கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அந்தவகையில் 534 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா, பும்ரா (2), சிராஜ்ஜிடம் விக்கெட்டுகளை இழந்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026