Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி நியூசிலாந்து பயணிக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், ஹமில்டனில் சனிக்கிழமை (14) ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய மூன்றாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளைப் பெற்றவாறு ஆரம்பித்த நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் 156, டரைல் மிற்செல்லின் 60, மிற்செல் சான்ட்னெரின் 49, றஷின் றவீந்திரவின் 44, டொம் பிளென்டலின் ஆட்டமிழக்காத 44 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 453 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜேக்கப் பெத்தெல் 3, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 2, ஷொய்ப் பஷிர் 2 மற்றும் குஸ் அட்கின்ஸன், ஜோ றூட், மத்தியூ பொட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலுக்கு 658 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, டிம் செளதி, மற் ஹென்றியிடம் பென் டக்கெட், ஸக் குறோலியை இழந்து மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பெத்தெல் ஒன்பது ஓட்டங்களுடனும், றூட் ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழக்காது களத்திலுள்ளனர்.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026