Shanmugan Murugavel / 2025 ஜூன் 04 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வெள்ளையடித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியிருந்த இங்கிலாந்து, ஓவலில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற மூன்றாவது போட்டியை டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் 7 விக்கெட்டுகளால் 62 பந்துகள் மீதமிருக்கையில் வென்றே 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
மே. தீவுகள்: 251/9 (40/40 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 70 (71), குடகேஷ் மோட்டி 63 (54), அல்ஸாரி ஜோசப் 41 (29), கேசி கார்ட்டி 29 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/40, சஹிப் மஹ்மூட் 2/48, மத்தியூ பொட்ஸ் 2/51, பிறைடன் கார்ஸ் 2/57)
இங்கிலாந்து: 246/3 (29.4/40 ஓவ. , வெ.இ: 246 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஜேமி ஸ்மித் 64 (28), பென் டக்கெட் 58 (46), ஜோ றூட் 44 (49), ஜொஸ் பட்லர் ஆ.இ 41 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 1/19, அல்ஸாரி ஜோசப் 1/52)
போட்டியின் நாயகன்: ஜேமி ஸ்மித்
தொடரின் நாயகன்: ஜோ றூட்
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026