Shanmugan Murugavel / 2021 மே 19 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் கடந்தாண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் முதற் தடவையாக சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான தொடருக்கான குறித்த குழாமில் ஷிம்ரோன் ஹெட்மயர், ஷெல்டன் கோட்ரல், ஒஷேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப இன்னும் தயாரில்லை என சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் தெரிவித்துள்ள நிலையில் அவர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம் பின்வருமாறு,
குழாம்: கெரான் பொலார்ட் (அணித்தலைவர்), நிக்கலஸ் பூரான் (விக்கெட் காப்பாளர்), பேபியன் அலென், டுவைன் பிராவோ, ஷெல்டன் கோட்ரல், பிடல் எட்வேர்ட்ஸ், அன்ட்ரே பிளட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேஸன் ஹோல்டர், அகீல் ஹொஸைன், எவின் லூயிஸ், ஒபெட் மக்கோய், அன்ட்ரே ரஸல், லென்டில் சிமொன்ஸ், ஒஷேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர்.
20 minute ago
29 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
4 hours ago