Shanmugan Murugavel / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேப்பியரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. 4 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களுடனும் காணப்பட்ட அவ்வணி, மகமதுல்லாவின் சிறப்பான துடுப்பாட்டம் மூலமே, ஓரளவு போட்டித்தன்மையான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மகமதுல்லா 52 (47), மொஸாடெக் ஹொஸைன் 20 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் லொக்கி பேர்குஸன் 3, பென் வீலர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
142 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. ஒரு கட்டத்தில் 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தும் பின்னர் 10.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களுடனும் தடுமாறிய அவ்வணி சார்பாக, 5ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 81 ஓட்டங்கள் பகிரப்பட்டன. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும் கொலின் டி கிரான்ட்ஹொம் 22 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக, கேன் வில்லியம்ஸன் தெரிவானார்.
23 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
1 hours ago