Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், அபு தாபியில் இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்ற பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது.
இத்தொடரில், மூன்றாவது தடவையாகவும் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில், ஆறு விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், இத்தொடரில், மூன்றாவது முறையாகவும் சதம் பெற்ற பாபர் அஸாம் 117(106), அணித்தலைவர் அஸார் அலி 101 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அல்ஸாரி ஜோசெப் இரண்டு, சுனில் நரைன், சுலைமான் பென், கீரன் பொலார்ட், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
பதிலுக்கு, 309 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று 136 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில், டினேஷ் ராம்டின் 37, கிரேய்க் பிறாத்வெயிட் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் மூன்று, வஹாப் றியாஸ் இரண்டு, இமாட் வஸீம், சொஹைல் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பாபர் அஸாம் தெரிவானார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago