2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மென்சிவப்பு கிரிக்கெட்: முன்னிலையில் இலங்கை ஏ

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் மிடையிலான 3 போட்டிகள் கொண்ட உத்தியோக -பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இன்று ஆரம்பித்தது. இதன் முதல்நாள் முடிவில், இலங்கை அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 86.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் விஷாவுள் சிங் 96, அணித்தலைவர் ஷமர் புரூக்ஸ் 65, கேமர் றோச் ஆட்டமிழக்காமல் 45, கெரான் பவல் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அசேல குணரட்ன 3 விக்கெட்டுகளையும் சரித் அசலங்கவும் அசித பெர்ணான்டோவும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தனது 2ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி, ஓர் ஓவர் மாத்திரம் துடுப்பெடுத்தாடியது. அந்த ஓவரில், ஓட்டமேதும் பெறப்பட்டிருக்கவில்லை.

பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்குத் தயார்படுத்துவதற்காக, இலங்கையில் முதன்முறையாக மென்சிவப்புப் பந்தில் இடம்பெறும் இப்போட்டி, பகல் போட்டியாகவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .